News October 1, 2025
கரூரில் இளம்பெண் கடத்தல்?

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், காக்காயம்பட்டியை சேர்ந்தவர் புஷ்பவல்லி 35. இவரது மகள் ஹேமலதா (19) உடன் நேற்று இருசக்கர மோட்டார் வாகனத்தில் பஞ்சப்பட்டி சாலையில் சென்றபோது காரில் வந்த அவரது கணவர் கோகுல்நாத் மற்றும் நண்பர்களான முத்துக்குமார், கமல், ராஜேஷ் ஆகிய 4 பேர் ஹேமலதாவை கடத்தி சென்றதாக புஷ்பவல்லி புகாரில் நான்கு பேர் மீது லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Similar News
News December 9, 2025
கரூர்: கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்!

கரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில், இன்று (09.12.2025) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சட்டமன்றத் தேர்தல் 2026 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்ட ஆய்வு பணிக்காக (FIRST LEVEL CHECKING) அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
News December 9, 2025
கரூர்: ரூ.85,000 சம்பளம் – 300 காலிப்பணியிடங்கள்!

கரூர் மக்களே, Oriental Insurance Company Limited-ல் காலியாக உள்ள 300 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. பணி: Administrative Officer (Scale-I).
2. கல்வித் தகுதி: Any Degree.
3. கடைசி தேதி : 18.12.2025.
4. சம்பளம்: ரூ.85,000/- வழங்கப்படும்.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
இத்தகவலை SHARE பண்ணுங்க!
News December 9, 2025
கரூர்: டூவீலர் நேருக்கு நேர் மோதி விபத்து

கரூர் ஆண்டாள் கோவில், சண்முகம் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, அதே வழியில், முருகேசன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில், சண்முகம் படுகாயம் எனது மேல் சிகிச்சைக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.


