News August 4, 2024
கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.3365 கிடைக்கும்

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம், நெமிலி, சோளிங்கர் வட்டங்களில் இருந்து கரும்பை விவசாயிகள் திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலைக்கு அனுப்பி வருகின்றனா் நிகழாண்டு ஆலைக்கு அனுப்பும் கரும்புக்கு டன் ஒன்றுக்கு மத்திய அரசு சாா்பில் ரூ.3150ம், தமிழக அரசின் கரும்பு ஊக்கத் தொகை ரூ215 சேர்த்து டன் ஒன்றுக்கு ரூ.3365 கிடைக்கும் என திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை செயலாட்சியர் ஜெ.மலா்விழி தெரிவித்துள்ளார்
Similar News
News January 16, 2026
ராணிப்பேட்டையில் டாஸ்மாக் இயங்காது!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று(ஜன.16) டாஸ்மாக் கடைகள் மற்றும் இறைச்சி விற்பனை கடைகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்த உத்தரவை மீறி கள்ளத் தனமாக விற்பனை செய்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 15, 2026
ராணிப்பேட்டை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (ஜன-15) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News January 15, 2026
ராணிப்பேட்டை: பொங்கலுக்கு பொருட்கள் வாங்குவோர் கவனத்திற்கு!

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம்.


