News July 10, 2024
‘கருணாநிதி’ பெயரில் ₹100 நாணயம் வெளியிட அனுமதி

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. ‘முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் எம்.கருணாநிதி’ என்ற பெயரில் நினைவு நாணயம் ஒன்றை வெளியிட தமிழ்நாடு அரசு விரும்பியது. இதற்காக, ₹100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்த நிலையில், தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News July 8, 2025
இதை சாப்பிட்டா HEART ATTACK வரும்… எச்சரிக்கை!

பயன்படுத்திய சமையல் எண்ணெய்யை, மீண்டும் பயன்படுத்துவது ஆபத்தானது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இந்த உணவுகளை சாப்பிட்டால் இதயநோய், புற்றுநோய், உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது. ஆனால், ஹோட்டல்களில் 60% அளவுக்கு, எண்ணெய் மீண்டும் பயன்படுத்தப்படுகிறதாம். டெல்லி, மும்பை, கொல்கத்தாவை ஒப்பிட சென்னை பரவாயில்லையாம். எனினும், வடை, பஜ்ஜி, போண்டா, சில்லி சிக்கன் சாப்பிடுமுன் யோசிக்கவும்.
News July 8, 2025
வேன் விபத்து… பள்ளிக்கு பறந்த திடீர் நோட்டீஸ்

கடலூர் மாவட்டத்தில் வேன் விபத்துக்குள்ளான தனியார் பள்ளிக்கு பள்ளிக்கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விபத்துக்குள்ளான வேனில் உதவியாளர் இல்லாதது தெரியவந்துள்ளது. ஆனால், மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் உதவியாளர் இருக்க வேண்டியது கட்டாயம். உதவியாளர் இல்லாமல் வேனை இயக்கியது ஏன் என விளக்கம் கோரப்பட்டுள்ளது. குழந்தைகளின் பள்ளி வாகனத்தில் உதவியாளர் இருக்கிறார்களா என பாருங்கள் பெற்றோரே..!
News July 8, 2025
குபேரா கலெக்ஷன் எவ்வளவு தெரியுமா?

தனுஷ், நாகார்ஜூனா, ரஷ்மிகா கூட்டணியில் உருவான ‘குபேரா’ படம் தியேட்டர்களில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. கடந்த 20-ம் தேதி வெளியான இப்படம் முதல் வாரத்தில் र100 கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதன்பின், வேறு படங்கள் ரிலீஸான நிலையில், குபேராவின் வசூல் படிப்படியாக குறையத் தொடங்கியது. இந்நிலையில், இதுவரையான 18 நாள்களில் குபேராவின் உலகளாவிய வசூல் र134.25 கோடி எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.