News August 7, 2024

கருணாநிதி படத்திற்கு அமைச்சர் நேரு மரியாதை

image

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அவரது உருவப்படத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு இன்று மலர் மாலை செலுத்தி அஞ்சலி செலுத்தினார். இதில் நிர்வாகிகள் பலரும் திமுகவினரும் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

Similar News

News March 11, 2026

EPS வருகை; முன்னாள் அமைச்சருக்கு அனுமதி மறுப்பு

image

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வருகை தந்தார். இந்நிலையில் அவரை வரவேற்க முன்னாள் எம்பி குமார், முன்னாள் அமைச்சர் சிவபதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்கூட்டியே அனுமதி கடிதம் வழங்காததால், அவர்களை விஐபி அறைக்குள் அனுமதிக்க முடியாது என விமான நிறைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

News March 11, 2026

திருச்சியில் பிரதமர் தொடங்கி வைக்கும் முக்கிய திட்டங்கள்!

image

திருச்சியில் இன்று மாலை நடைபெறும் அரசு விழாவில் ₹5,650 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இதில், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் ₹3,680 கோடி முதலீட்டில் BPC நிறுவனத்திற்கு அடிக்கல், சென்னை மணலியில் ₹1,490 கோடியில் IOC மசகு எண்ணெய் கலவை ஆலை திறப்பு உள்ளிட்டவைகள் அடங்கும். மேலும், கோவை – தன்பாத் இடையே அம்ரித் பாரத் உள்ளிட்ட 5 புதிய ரயில் சேவைகளையும் தொடங்கி வைக்க உள்ளார்.

News March 11, 2026

பொது தேர்வு தொடக்கம் – அமைச்சர் வாழ்த்து

image

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்க உள்ளது. இந்நிலையில், திருச்சி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், முதல் பொதுதேர்வை எழுத உள்ளீர்கள். அந்த எக்சைட்மென்ட் இருக்க வேண்டுமே தவிர பயம் இருக்க கூடாது. மற்ற தேர்வுகளை போல இதுவும் ஒரு தேர்வுதான். மகிழ்ச்சியுடன் தேர்வறைக்குள் செல்லுங்கள். ஆல் தி பெஸ்ட் என அவர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!