News April 1, 2025
கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி – கலெக்டர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் சமூகத்தை சேர்ந்த 12-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு “என் கல்லூரி கனவு” என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பள்ளியில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 20, 2026
தூத்துக்குடி: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

தூத்துக்குடி மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். <
News January 20, 2026
கோவில்பட்டி: மாமனாரை சரமாரியாக வெட்டிய மருமகன்

கங்கைகொண்டானை சேர்ந்த உலகநாதன் தனது மகள் செல்வியை(25) கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாப்பாகுடியை சேர்ந்த கருப்பசாமிக்கு(30) திருமணம் செய்து கொடுத்துள்ளார். 4 மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக செல்வி தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை உலகநாதன், செல்வி கயத்தாறுக்கு சென்ற போது அங்கு தகராறில் ஈடுபட்ட கருப்பசாமி அரிவாளால் உலகநாதனை வெட்டியதில் அவரது கட்டை விரல் துண்டானது.
News January 20, 2026
தூத்துக்குடி: இளைஞர் கொலையில் ஆயுள் தண்டனை

திருச்செந்தூர் ராஜேஷ் கண்ணா நகரில் வசித்தவர் மேடை அலங்கார கலைஞர் கந்தசாமி. இவரது வீட்டின் மாடியில் ராஜஸ்தானை சேர்ந்த வினோத் தாராகா(26) வசித்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு மது போதையில் ஏற்பட்ட தகராறில் கந்தசாமி, கல் மற்றும் அம்மி குலவியால் வினோத் தாராகாவை தாக்கி கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் கந்தசாமிக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது.


