News May 14, 2024
கட்டுமான பணிகள் – தமிழக அரசு அதிரடி உத்தரவு

சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக, தொழிலாளர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, மே மாதம் இறுதி வரை, சென்னை மற்றும் மதுரையில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று அனைத்து கட்டுமான நிறுவனங்களுக்கும் “தொழிலக பாதுகாப்பு இயக்ககம் ” தற்போது உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 7, 2025
மதுரை: இழந்த பணத்தை திருப்பி பெறுவது இனி சுலபம்.!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News December 7, 2025
மேலூரில் மதுக் கடத்திய போலீஸ்காரர் கைது

மதுரை மாவட்டம் மேலூரில் சிறப்பு புலனாய்வு இன்ஸ்பெக்டர் மணிக்குமார், எஸ்.ஐ., சின்னமந்தையன், ஏட்டு பாஸ்கரன் தலைமையிலான போலீசார் இன்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் மது பாட்டில்கள் கடத்தியதாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் போலீஸ்காரர் பாண்டி குமார் என்பவரை கைது செய்து மேலூர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
News December 7, 2025
மதுரையில் ரூ.36,680 கோடி முதலீடு: 57,000 பேருக்கு வேலைவாய்ப்பு

மதுரையில் இன்று (டிசம்பர் 7) நடைபெற்ற ‘TN Rising’ தொழில் முதலீட்டு மாநாட்டில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ரூ.36,680 கோடி முதலீட்டில் 91 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் சுமார் 57,000 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், மேலூர் சிப்காட் தொழிற்பூங்காவுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.


