News August 8, 2024
கடையநல்லூர் அருகே மாட்டை கொன்ற சிறுத்தை

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் வனச்சரகம், மேக்கரை பிரிவு வெள்ளைக்கல் தெரு பகுதியில் உள்ள காஜா மைதீன் என்பவர் தோட்டத்தில் 2 பசு மாடு & கன்றுகளை கட்டி வைத்திருந்தனர். ஆக.,6 அன்று இவர்கள் தோட்டத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒரு பசுமாட்டை கடித்துக் குதறி கொன்ற நிலையில், மற்றொரு மாட்டையும் கடித்துள்ளது. தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று நேற்று ஆய்வு நடத்தினர்.
Similar News
News November 12, 2025
தென்காசி கம்மி விலைக்கு பைக், கார் வேணுமா??

தென்காசி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 93 இருசக்கர மோட்டார் வாகனங்கள், 02 மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள் மற்றும் 02 நான்கு சக்கர மோட்டார் வாகனங்கள் என மொத்தம் 97 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் 20.11.2025 ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தென்காசி I.C.I அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. SHARE!
News November 12, 2025
தென்காசி: இலவச மரக்கன்றுகள் வேணுமா??

சிவகிரி வனச்சரக உட்பட்ட சிவகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம் வட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், தனியார் பள்ளிகள், மருத்துவமனைகள், கல்லூரிகள், கோவில்கள், தனியார் பட்டா விவசாய நிலங்கள் உள்ளிட்ட இடங்களில் நட வேங்கை, தேக்கு, ஈட்டி, மகாகனி, வேம்பு, புங்கன் ஆகிய மரக்கன்றுகள் பெற ஆதார், வங்கிகணக்கு, பட்டா, 10(1) அடங்கல் ஆகிய நகல் கொடுக்கவும். தொடர்பு சிவகிரி வனச்சரக அலுவலர்
9629089469, 7904523216
News November 12, 2025
தென்காசி கிணற்றில் கிடந்த பச்சிளம் குழந்தை

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மகேந்திரவாடி கிராமத்தில் பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தை இன்று உயிரிழந்த நிலையில் கிணற்றில் மிதந்தது.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அய்யாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து குழந்தை உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


