News November 14, 2025
கடலூர்: SIR திருத்தம் – தொலைபேசி எண்கள் வெளியீடு

வாக்காளர் திருத்த படிவம் தொடர்பாக சந்தேகங்களுக்கு தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டக்குடி (தனி) – 04143-255249, விருத்தாசலம் – 04143-238289, நெய்வேலி – 04142-241741, பண்ருட்டி – 04142-241741, கடலூர் – 04142-295189, குறிஞ்சிப்பாடி – 04142-258901, புவனகிரி – 04144-240299, சிதம்பரம் 04144-227866, காட்டுமன்னார் கோயில் (தனி) 04144-262053 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 7, 2025
கடலூர்: மழை நீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள்

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி மருங்கூர் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக டிட்வா புயலின் எதிரொலியால் பெய்து வந்த தொடர் மழையால், மழை நீர் வெளியேற வழி இன்றி வயலில் தேங்கியுள்ளது. இதன் காரணமாக நெற்பயிர்கள் அனைத்தும் முற்றிலுமாக மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
News December 7, 2025
கடலூர்: பண்ணை தொழில் செய்ய சூப்பர் வாய்ப்பு!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News December 7, 2025
கடலூர்: இலவச தொழில் பயிற்சி

கடலூர் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் கீரப்பாளையம் இந்தியக் கிராமப்புற கல்வி ஏவுதள மையம் இணைந்து நடத்தும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்குதலுக்கான இலவச பயிற்சி வகுப்பு டிசம்பர் 10-ம் தேதி முதல் கீரப்பாளையம் காமராஜர் தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பதிவு மற்றும் மேலும் விபரங்களுக்கு 9629752271, 9092493827 என்ற எண்களை அழைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.


