News August 8, 2025
கடலூர்: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை! APPLY NOW

கடலூர் மக்களே, பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், காலியாகவுள்ள 417 Manager – Sales, Officer Agriculture Sales, Manager Agriculture Sales பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள், வரும் 26ம் தேதிக்குள் <
Similar News
News November 13, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (நவ.12) இரவு 10 மணி முதல் இன்று (நவ.13) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 12, 2025
கடலூர்: ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் மாதம்தோறும் நான்கு புதன் கிழமைகளில் நடைபெற்று வந்த மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை (Unique Disabiliy Identity Card) வழங்கும் முகாம்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மாதத்தின் முதல் வார புதன் மற்றும் அனைத்து வெள்ளிகிழமைளில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
கடலூர்: டிராக்டர் சக்கரம் ஏறி பரிதாப பலி

கடலூர் கம்மியம்பேட்டை பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (56). இவர் குடிநீர் எடுத்து செல்லும் டிராக்டர் வண்டியின் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல குடிநீர் வண்டியில் கடலூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, வேல்முருகன் வண்டியில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதில் வண்டியின் பின் சக்கரம் லோகநாதன் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


