News November 25, 2025
கடலூர் மாவட்ட போலீசார் அதிரடி

கடலூர் மாவட்டம், பொயனபாடியில் ஸ்கேன் எந்திரத்தை பயன்படுத்தி வயிற்றில் உள்ள சிசுவின் பாலினத்தை கண்டறிந்த புகாரில் தென்னரசு, முருகன், செந்தில்குமார், ராஜா, ராஜேஸ்வரி உள்ளிட்ட 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட ராஜா (36) என்பவரது குற்ற செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு எஸ்.பி ஜெயக்குமார் பரிந்துரையில் பேரில், அவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
Similar News
News January 20, 2026
கடலூர்: மனமுடைந்த முதியவர் தற்கொலை முயற்சி

ஆல்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நேற்று முதியவர் ஒருவர் தண்ணீரில் இறங்கினார். அப்போது அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால், அங்கிருந்த போலீசார் அவரை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரதிமங்கலம் பகுதியைச் சேர்ந்த தனசேகர்(75), என்பதும் பிள்ளைகள் சரியாக கவனிக்காததால் மனமுடைந்து, தற்கொலை முயற்சித்ததும் தெரிய வந்தது. இதையெடுத்து, போலீசார் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
News January 20, 2026
கடலூர்: அரசு சுகாதார துறையில் வேலை!

தமிழ்நாடு சுகாதார துறையில், காலியாக உள்ள 999 செவிலியர் உதவியாளர் (தரம்-2) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 999
3. வயது – 18 – 44
4. சம்பளம்: ரூ.15,700-ரூ.58,100
5. கல்வித்தகுதி: 10th & Nursing Assistants Course
6. கடைசி தேதி: 08.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 20, 2026
கடலூர்: ரூ.300 கேஸ் மானியம் வேண்டுமா?

கடலூர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா? அதற்கு<


