News November 26, 2025

கடலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் இறால் மற்றும் உவர் மீன் வளர்ப்போர் மானியத்துடன் கூடிய புதிய குளங்கள் அமைத்திட விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். இறால் வளர்ப்போரை ஊக்குவிக்கும் விதமாக அதிகபட்சமாக ரூ.5.40 லட்சம் மானியமாக வழங்கப்படும். இதற்கு 31.12.2025-க்குள் பரங்கிப்பேட்டை மீன்வளத்துறை அலுவலகத்தில் உரிய ஆவணத்துடன் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 13, 2026

கடலூர்: உங்க தொகுதி எம்எல்ஏ நம்பர் இருக்கா?

image

1. திட்டக்குடி – கணேசன் (94434 45168)
2. விருத்தாசலம் – ராதாகிருஷ்ணன் (99768 08844)
3. நெய்வேலி, ராஜேந்திரன் (94432 53251)
4. பண்ருட்டி, வேல்முருகன் (87789 75909)
5. கடலூர் – ஐயப்பன் (94433 66556)
6. குறிஞ்சிப்பாடி – பன்னீர்செல்வம் (94433 71590)
7. புவனகிரி – அருண்மொழித்தேவன் (94432 08789)
8. சிதம்பரம் – பாண்டியன் (94431 51922)
9. காட்டுமன்னார்கோவில் – சிந்தனை செல்வன் (94438 76700)

News January 13, 2026

கடலூர்: 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை

image

விழுப்புரம் மாவட்டம், ஆனத்தூரை சேர்ந்த மணிகண்டன் மகன் சிவவிஷ்ணு (13), கடலூரில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்து, தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த அரையாண்டு தேர்வில் அனைத்து பாடங்களிலும் பெயில் ஆனதால் மனமுடைந்த சிவவிஷ்ணு நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

News January 13, 2026

கடலூர்: மனைவி கண் முன்னே கார் மோதி பலி

image

காட்டுமன்னார்கோவில் அடுத்த திருச்சின்னபுரத்தை சேர்ந்தவர் உதயச்சந்திரன் (48). ஓ.என்.ஜி.சி. நிறுவன தொழிலாளியான இவர் தனது மனைவி பழனியம்மாளுடன்(38) பைக்கில் வீராணம் ஏரிக்கரை வழியாக சென்றபோது எதிரே வந்த கார் மோதி படுகாயம் அடைந்த உதயசந்திரன் நேற்று உயிரிழந்தார். படுகாயமடைந்த பழனியம்மாள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து புத்தூர் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!