News August 4, 2024
கடலூர் மாவட்டத்தில் இன்றைய வெப்பநிலை நிலவரம்

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று, கடலூர் 36 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 36 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 37 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 37 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
Similar News
News January 17, 2026
கடலூர்: போலீஸ் எஸ்.ஐ. விபத்தில் பலி

சிதம்பரம் அடுத்த மதுராந்தகநல்லூரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (60). சேத்தியாத்தோப்பு போலீஸ் நிலையத்தில் எஸ்.ஐ. ஆக பணிபுரிந்த இவர் நேற்று இரவு பணி முடிந்ததும் தனது பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். வி குமாரமங்கலம் அருகில் சென்ற போது எதிர்பாராத விதமாக பைக்கில் இருந்து கீழே விழுந்ததில் படுகாயம் அடைந்த ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News January 17, 2026
கடலூர்: பைக் மோதி பெண் மரணம்!

காட்டுமன்னார்கோயில் அடுத்த மடப்புரத்தை சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி ஜெயக்கொடி (62). இவர் நேற்று அதே பகுதியில் உள்ள வயல் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பைக் ஜெயக்கொடி மீது மோதியதில், தலையில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
News January 17, 2026
கடலூர்: இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜன.16) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.


