News November 14, 2025
கடலூர்: மனைவி நோயால் பாதிப்பு-கணவன் தற்கொலை

கரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த முத்தமிழ்செல்வன் (34) கம்ப்யூட்டர் சென்டரில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி பத்மினிக்கு தைராய்டு நோய் உள்ளதாக தெரிகிறது. இதனால் முத்தமிழ்செல்வன் கடும் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று திடீரென்று வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து பத்மினி கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News December 8, 2025
கடலூரில் பழைய வாகனங்கள் ஏலம்; எஸ்பி அறிவிப்பு

கடலூர் மாவட்ட காவல் துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட 16 நான்கு சக்கர வாகனங்கள், 34 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 50 வாகனங்கள் வருகிற டிச.23ம் தேதி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படும் என்று எஸ்பி. ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஏலத்தில் கலந்து கொள்பவர்கள், இருசக்கர வாகனத்திற்கு ரூ.5 ஆயிரம், நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.10,000 செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
News December 8, 2025
கடலூர்: ரூ.85,000 சம்பளத்தில் வேலை!

‘ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி’ நிறுவனத்தில் காலியாக உள்ள Administrative Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 300
3. வயது: 21-30 (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.85,000
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 8, 2025
கடலூர்: ராட்சத முதலையால் மக்கள் அச்சம்

கம்மாபுரம் அருகே உள்ள தட்டானோடை கிராமத்தில் ஓடை வாய்க்கால் ஒன்று அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று சுமார் 6 அடி நீளம் கொண்ட ராட்சத முதலை ஓடையில் கிடந்துள்ளது. இதனை கண்டு அச்சமடைந்த மக்கள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து முதலையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் முதலையை பிடிக்கும் வரை ஓடையில் யாரும் மீன்பிடிக்க கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


