News May 1, 2024
கடலூர் மத்திய சிறையில் ‘கஞ்சா’ பறிமுதல்

கடலூர் மத்திய சிறையில் விசாரணை (ம) தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று தலைமை காவலர், மோப்ப நாயுடன் சிறை வளாகத்தில் சோதனை ஈடுபட்டனர். அப்போது சிறை பள்ளிக்கு பின்புறம் மரத்தின்கீழ் 20 கிராம் கஞ்சா பொட்டலமாக கட்டி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. இதையடுத்து சிறை காவலர்கள் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். புகாரின் பேரில் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
Similar News
News December 5, 2025
கடலூர்: BE /B.Tech படித்தவர்களுக்கு அரசு வேலை!

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் (HCL) காலியாக உள்ள Junior Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 64
3. வயது: 18-40 (SC/ST-45,OBC-43)
4. மாதச்சம்பளம்: ரூ.30,000 – ரூ.1,20,000
5. கல்வித் தகுதி: B.E / B.Tech, Diploma
6. கடைசி தேதி: 17.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 5, 2025
கடலூர் மாவட்டம் முழுவதும் 126.1 மில்லி மீட்டர் மழை பதிவு

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று (டிசம்பர் 5) காலை 8.30 மணி நிலவரப்படி பெலாந்துறை 37.8 மில்லி மீட்டர், வேப்பூர் 13.5 மில்லி மீட்டர், காட்டுமைலூர் 11.2 மில்லி மீட்டர், மே.மாத்தூர் 10 மில்லி மீட்டர், லக்கூர் 9.1 மில்லி மீட்டர், பண்ருட்டி 9 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 126.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
News December 5, 2025
கடலூர் மாவட்டத்தில் 2.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ?

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியில் இதுவரை நடந்த கணக்கெடுப்பில் இறப்பு, முகவரி மாற்றம், இரட்டைப் பதிவு, ஊரில் வசிக்காமை போன்ற காரணங்களுக்காக 2,62,650 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் வரும் 11-ம் தேதி வரை அவகாசம் இருப்பதால் நீக்கப்பட்ட வாக்காளர்களை மீண்டும் ஒரு முறை சரிபார்க்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


