News October 17, 2025
கடலூர்: புகார் தெரிவிக்க வாட்ஸ்அப் எண் வெளியீடு

கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, பலகாரம் மற்றும் உணவுப் பொருட்கள் தொடர்பாக பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணை நேற்று வெளியிட்டார். இந்த எண்ணில் தரம் மற்றும் சுகாதாரம் இல்லாத உணவுப் பொருட்கள் குறித்து புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 16, 2025
கடலூர்: மீண்டும் கனமழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கடலூர் மாவட்டத்திற்கு இன்று ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளையும் (நவ.17) இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 16, 2025
கடலூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 16, 2025
கடலூர் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை

கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குனர் நித்தியா பிரியதர்ஷினி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும், படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்குமாறு மீனவர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.


