News April 10, 2024

கடலூர்: தொல்.திருமாவளவன் வீட்டில் சோதனை

image

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரத்தில் தங்கியிருந்த வீட்டில் நேற்று வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. நேற்று மாலை சுமார் ஐந்து பேர் கொண்ட குழுவினர் ஒரு மணி நேரமாக திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் வீட்டின் உரிமையாளரிடம் இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் ஒரு உத்தரவிட்டுள்ளனர்.

Similar News

News December 12, 2025

கடலூர்: ஆம்லெட் கிடைக்காததால் தற்கொலை!

image

நெல்லிக்குப்பம், திருகண்டேஸ்வரத்தைச் சேர்ந்தவர் சலவை தொழிலாளி செந்தில்குமார் (49). இவர் குடிபோதையில் வீட்டிற்கு வந்தபோது மனைவியிடம் ஆம்லெட் போட்டு தரும்படி கேட்டுள்ளார். ஆனால் அவர் ஆம்லெட் போடாததால் விரக்தி அடைந்த அவர், தற்கொலைக்கு முயன்று, ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். நெல்லிக்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 12, 2025

கடலூர்: டிராக்டர் வாங்க 50% மானியம்!

image

மத்திய அரசின் ‘பிரதம மந்திரி கிசான் டிராக்டர் யோஜனா’ திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க 50% மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு பொருளாதார ரீதியாக நலிவடைந்த 18-60 வயதுடைய விவசாயிகள் மாவட்ட வேளாண் துறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு மானியத்துடன் டிராக்டர் வாங்க வங்கிக் கடனும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…

News December 12, 2025

கடலூர்: கல்வி உதவித் தொகை வேண்டுமா?

image

கடலூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லுாரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்ட , மிகப்பிற்படுத்தப்பட்ட , சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ-மாணவியருக்கு பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் உதவி தொகை வழங்கப்படும். இதற்கு 31.12.2025-குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!