News August 19, 2024
கடலூர் துறைமுகத்தில் மீன்கள் விலை உயர்வு

கடலூர் துறைமுகத்தில் நேற்று மீன்களின் விலை மிகவும் அதிகரித்து காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வாங்குவதற்காக வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவு குவிந்தனர். 1 கிலோ வஞ்சிரம் 1000 ரூபாய்க்கும், சங்கரா 400 ரூபாய், கனவாய் 300 ரூபாய், இறால் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.
Similar News
News January 24, 2026
கடலூர்: உங்க பணத்தை பாதுகாக்க இத பண்ணுங்க!

கடலூர் மக்களே.. உங்கள் Gpay, phonepe, paytm போன்றவற்றில் தானாக பணம் போகிறதா? அதனை தடுக்க அருமையான வழி. அதற்கு <
News January 24, 2026
கடலூர்: தீக்குளித்து முதாட்டி பலி

அண்ணாகிராமம் அடுத்த பத்திரக்கோட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் ராசாத்தி (68). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது சேலையில் தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. அதனையடுத்து தீக்காயத்துடன் ஆபத்தான நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News January 24, 2026
கடலூர் ஆட்சியrரின் முக்கிய அறிவிப்பு

குடியரசு தின விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் வரும் ஜன.26-ம் தேதி அன்று காலை 11 மணி அளவில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ளது. அதனால் இந்த கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் இடம், நேரம் குறித்து முன்கூட்டியே ஊராட்சிப் பொதுமக்களுக்கு தனி அலுவலர்கள் தெரியப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.


