News October 1, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று(செப்.30) இரவு 10 மணி முதல் இன்று (செப்.1) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட, சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 15, 2025
கடலூர்: நிலம் வாங்க ரூ.5 லட்சம்!

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு <
News December 15, 2025
கடலூர்: திருமணம் மறுப்பு-இளைஞர் தற்கொலை

கிள்ளையைச் சேர்ந்தவர் உலகநாதன் (25). இவர் அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம் பெண்ணை காதலித்து வந்த நிலையில், அந்த பெண்ணுக்கு வேறு இடத்தில் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனர். இதனால் உலகநாதன் தனது காதலியை சந்தித்து திருமணம் செய்யக் கூறியபோது அவர் மறுத்துள்ளார். இதில் மனமுடைந்த உலகநாதன் நேற்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து கிள்ளை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News December 15, 2025
கடலூர்: அரசு வங்கியில் வேலை ரெடி – APPLY NOW!

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-50
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு, BE
6. கடைசி தேதி: 31.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!


