News July 16, 2024
கடலூர் அருகே மூன்று பேர் எரித்து கொலை; தனிப்படைகள் அமைப்பு

கடலூர் அருகே காரமணிக்குப்பத்தில் கடந்த 13-ம் தேதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.3 பேர் கொல்லப்பட்ட பிறகு எரித்து கொல்லப்பட்டதாக நேற்றைய விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற எஸ்பி, 5 தனிப்படைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.கொலைக்கான காரணம் குறித்து கடலூர் காவல்துறை விசாரிக்கின்றனர்.
Similar News
News July 8, 2025
கடலூர் அருகே தந்தை திட்டியதால் மாணவன் தற்கொலை

நடுவீரப்பட்டு அருகே சிலம்பிநாதன் பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் பாலகிருஷ்ணன் (20). இவர் பண்ருட்டி அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் மாணவன் சரிவர கல்லூரி செல்லாத காரணத்தால், தட்சிணாமூர்த்தி மாணவனை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த அவர், சம்பவத்தன்று தனது வீட்டின் அருகில் இருந்த தோப்பில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
News July 8, 2025
கடலூர்: இன்று இரவு ரோந்து பணி தொலைபேசி எண் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜூன் 07) கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் இன்று இரவு ரோந்து அதிகாரிகள் அலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
News July 7, 2025
கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தில் கார், குறுவை, சொர்ணவாரி பருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் காப்பீடு செய்ய கடைசி நாள் 31.7.2025 மற்றும் இதர காரீப் பருவ பயிர்களான மணிலா, கம்பு, மற்றும் எள் பயிர்கள் பிர்கா அளவிலும் விவசாயிகள் பதிவு செய்ய கடைசி நாள் 16.8.2025 ஆகும். எனவே, கடலூர் மாவட்ட விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.