News April 23, 2025

கடலூர் அருகே துப்பாக்கி தயாரித்த 3 பேர் கைது

image

காடாம்புலியூர் உதவி ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் போலீசார் நேற்று வேலன்குப்பம் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மணிகண்டன், விக்ரம், சந்தானபிரபு ஆகிய 3 பேரை சோதனை செய்தபோது அவர்களிடம் பிளாஸ்டிக் துப்பாக்கி இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் முயல், எலி, காட்டு பன்றிகளை வேட்டையாட யூடியூபில் பார்த்து தயாரிக்கப்பட்டது எனக் கூறினர். உடனே 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Similar News

News December 7, 2025

கடலூர்: மழை நீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள்

image

விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி மருங்கூர் அதனை சுற்றியுள்ள கிராமத்தில் சுமார் 500 ஏக்கர் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக டிட்வா புயலின் எதிரொலியால் பெய்து வந்த தொடர் மழையால், மழை நீர் வெளியேற வழி இன்றி வயலில் தேங்கியுள்ளது. இதன் காரணமாக நெற்பயிர்கள் அனைத்தும் முற்றிலுமாக மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

News December 7, 2025

கடலூர்: பண்ணை தொழில் செய்ய சூப்பர் வாய்ப்பு!

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in என்ற இணையதளம்<<>> வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News December 7, 2025

கடலூர்: இலவச தொழில் பயிற்சி

image

கடலூர் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மற்றும் கீரப்பாளையம் இந்தியக் கிராமப்புற கல்வி ஏவுதள மையம் இணைந்து நடத்தும் இருசக்கர வாகனங்கள் பழுது நீக்குதலுக்கான இலவச பயிற்சி வகுப்பு டிசம்பர் 10-ம் தேதி முதல் கீரப்பாளையம் காமராஜர் தொழில் நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது. இதற்கு முன்பதிவு மற்றும் மேலும் விபரங்களுக்கு 9629752271, 9092493827 என்ற எண்களை அழைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!