News April 9, 2024
கடலூரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர் பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பள பாக்கி உடனே வழங்க வேண்டும், எங்களுக்கு இஎஸ்ஐ மற்றும் பி.எப் பிடித்தம் செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார்.மாவட்டச் செயலாளர் சௌந்தர்ராஜன் முன்னிலை வகித்தார்.
Similar News
News December 14, 2025
கடலூர்: ரூ.96,210 சம்பளம்.. TNSC வங்கியில் வேலை!

தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: தமிழ்நாடு அரசு வேலை
2. பணியிடங்கள்: 50
3. வயது: 18-32 (SC/ST- வயது வரம்பு கிடையாது)
4. சம்பளம்: ரூ.32,020 – ரூ.96,210
5. கல்வித் தகுதி: Any Degree
6. கடைசி தேதி: 31.12.2025
7. மேலும் தகவலுக்கு: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 14, 2025
கடலூர்: கைரேகை பதிவு செய்ய கடைசி வாய்ப்பு!

கடலூர் மாவட்டத்தில் உள்ள 1,415 ரேஷன் கடைகளில், சுமார் 7½ லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பொருட்களை வாங்குகின்றனர். இந்நிலையில் இவர்களில் இதுவரை 1 லட்சத்து 85 ஆயிரம் பேர் கைரேகையை பதிவு செய்யவில்லை எனவும், விடுபட்ட நபர்கள் தங்களது பகுதியில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் கைரேகையை பதிவு செய்யுமாறு அதிகாரி தெரிவித்துள்ளார்.
News December 14, 2025
கடலூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!


