News April 10, 2024
கடலூரில் சின்னம் பொருத்தம் பணி

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணி இன்று கடலூர் தாலுகா அலுவலகத்தில் நடந்தது. இந்த பணியை கலெக்டர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வேட்பாளர்களின் பெயர், சின்னம் சரியாக உள்ளதா? என ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Similar News
News December 5, 2025
கடலூர்: 12 வயது சிறுமி கர்ப்பம்; இளைஞர் கைது

சேத்தியாத்தோப்பு அருகே 12 வயது சிறுமி செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே சூளையில் வேலை பார்த்து வந்த மணிகண்டன் (26) என்பவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதில் அவர் கருவுற்றார். இதையடுத்து மருத்துவனையில் சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அளித்த புகாரின் பேரில் சேத்தியாதோப்பு போலீசார் மணிகண்டனை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
News December 5, 2025
கடலூர்: தூக்கில் சடலமாக தொங்கிய மாணவி

மஞ்சக்குப்பத்தை சேர்ந்த கந்தவேல் மகள் சுருதி (19). வேலூரில் தனியார் கல்லூரியில் படித்து வந்த இவர் நேற்று முன் தினம் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் தனது தாய் தீபாவுடன் சுருதி உறங்கியுள்ளார். இதையடுத்து அதிகாலை அவரது தாய் எழுந்து பார்த்தபோது சுருதி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதைக்கண்டு கதறிய அவரது தாய் அளித்த புகாரின் பேரில், புதுநகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News December 5, 2025
கடலூர்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விபரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அவ்வகையில் நேற்று (டிச.4) இரவு 10 மணி முதல் இன்று(டிச.5) காலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி உள்ளிட்ட இடங்களில் ரோந்து செல்லும் காவல் அலுவலர்கள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


