News November 22, 2024

கடற்படை நீர்மூழ்கி – மீனவர்கள் படகு மோதல்; இருவர் மாயம்!

image

இந்திய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கி கப்பலுடன் மீன்பிடி படகு மோதியதில் 2 மீனவர்கள் மாயமாகியுள்ளனர். கோவா கடற்கரையிலிருந்து 70 கடல் மைல்கள் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீன்பிடி படகு ஒன்று, இந்திய கடற்படைக்குச் சொந்தமான நீர்மூழ்கி கப்பலுடன் எதிர்பாராத விதமாக மோதி சேதமடைந்தது. படகிலிருந்த 13 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மாயமான இருவரை தேடும் பணி நடந்து வருகிறது.

Similar News

News November 8, 2025

2026 தேர்தலில் SIR தான் ஹீரோ: கடம்பூர் ராஜூ

image

2026 தேர்தலில் SIR தான் ஹீரோ ஆக இருக்கும் என கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். TN-ல் ஒவ்வொரு தொகுதியிலும் 10 முதல் 12,000 போலி வாக்காளர்கள் உள்ளதாக குற்றஞ்சாட்டிய அவர், அதனால் தான் SIR என்றாலே திமுகவுக்கு பயம், நடுக்கம் ஏற்படுவதாக கூறியுள்ளார். SIR சிறப்பாக நடைபெற்று தகுதியானவர்கள் வாக்களிக்கும் போதும், கண்டிப்பாக தேர்தலில் வெற்றி பெற்று EPS முதல்வராக வருவார் என்றும், கடம்பூர் ராஜூ பேசியுள்ளார்.

News November 8, 2025

நவம்பர் 8: வரலாற்றில் இன்று

image

*1680–தமிழறிஞர் வீரமா முனிவர் பிறந்தநாள். *1910–தவில் கலைஞர் நாச்சியார்கோயில் ராகவப்பிள்ளை பிறந்தநாள். *1927–மூத்த அரசியல்வாதி அத்வானி பிறந்தநாள் *1947–பாடகி உஷா உதுப் பிறந்தநாள். *1966–அரசியல்வாதி சீமான் பிறந்தநாள். *1987–எழுத்தாளர் சக்தி கிருஷ்ணசாமி மறைந்த நாள். *1989–நடிகர் அசோக் செல்வன் பிறந்தநாள். *2006–அரசியல்வாதி கா.காளிமுத்து மறைந்த நாள். *2016–PM மோடி பணமதிப்பிழப்பு அறிவித்த நாள்.

News November 8, 2025

இந்திய அணியில் சா பூ திரி விளையாட்டு?

image

ஒவ்வொரு போட்டிக்கும் இந்தியாவின் பேட்டிங் ஆர்டர் தேவையின்றி மாற்றப்படுவதாக ரசிகர்கள் கருதுகின்றனர். 1, 3-வது டி20-ல் சூர்யகுமார் ஒன் டவுன் வீரராக களமிறங்க, அதே வரிசையில் 2-வது டி20-ல் சாம்ஸன், 4-வது டி20-ல் துபே களமிறங்கினர். இதில் சஞ்சு 2 ரன்களுக்கு அவுட் ஆனதால், அடுத்த போட்டியில் டிராப் செய்யப்பட்டார். இப்படி செய்வது ஃபார்மில் இருக்கும் வீரர்களை பாதிக்கும் என்று ரசிகர்களும் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!