News November 30, 2024
கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடு – முதல்வர் ரங்கசாமி ஆய்வு

புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக, கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் கடற்கரைக்கு பொதுமக்கள் வர வேண்டாம் என, போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கிடையில் நேற்று முதல்வர் ரங்கசாமி, கடற்கரையை பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடலில் இயங்காதவாறு பார்க்க அறிவுறுத்தினார்.
Similar News
News November 17, 2025
புதுவை: ஸ்டுடியோவின் பூட்டை உடைத்து திருட்டு

கிருமாம்பாக்கம் சுப்பையா நகரைச் சேர்ந்தவர் அன்பரசன். காட்டுக்குப்பம் மெயின் ரோட்டில் போட்டோ ஸ்டுடியோ வைத்துள்ளார். இந்த கடையில் ஷட்டரில் உள்ள 2 பூட்டை உடைத்து உள்ளே இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான 3 கேமராக்கள், 5 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டுள்ளதாக அன்பரசன் அளித்த புகாரின் பேரில், போலீசார் நேற்று வழக்குப் பதிந்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
News November 17, 2025
புதுச்சேரி: இன்று விடுமுறை அறிவிப்பு

வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (17/11/25) புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் உள்ள அனைத்து அரசு பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மற்றும் அனைத்து கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது என்று கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
News November 17, 2025
கோரிமேட்டில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

புதுச்சேரி, கோரிமேட்டில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில், பள்ளிகளுக்கு இடையேயான (வட்டம்-2) தடகள போட்டிகள் நேற்று நடந்து. பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதில் துணை இயக்குனர் வைத்திய நாதன், உடற்கல்வி விரிவுரையாளர் ரவிக்குமார், உடற் கல்வி ஆசிரியர் பிரகாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் 1,200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.


