News January 14, 2025

கடம்பூர் அருகே யானை தாக்கி ஒருவர் பலி

image

ஈரோடு: கடம்பூர் மலை கிராமம் காடட்டியைச் சேர்ந்தவர் மாதேவப்பா (68). இவர் இன்று தேன் பாறை என்ற இடத்தில் விறகு எடுக்க சிலருடன் சென்றுள்ளார். அப்போது, புதர் மறைவில் இருந்து வெளியே வந்த யானை ஒன்று, விறகு எடுத்துக்கொண்டு இருந்தவர்களை தாக்கியது. மற்றவர்கள் தப்பி ஓட மாதேவப்பாவை யானை தாக்கியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து கேர்மாளம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News November 11, 2025

ஈரோடு: நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

ஈரோடு மாவட்டத்தில் கீழ்கண்ட இடங்களில் நாளை (நவ.12) ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அதன்படி, நேதாஜி மார்க்கெட் வணிக வளாகம், ஈரோடு (ஈரோடு மாநகராட்சி மண்டலம்-4), ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் மண்டபம்-ஆனைகவுண்டனூர் (அம்மாபேட்டை வட்டாரம்), மாணிக்கம் முதலியார் திருமண மண்டபம்-சுள்ளிபாளையம்(பெருந்துறை வட்டாரம்), உக்கரம் சமுதாயக் கூடம், உக்கரம்(சத்தி வட்டாரம்) பகுதிகளில் நடைபெற உள்ளது.

News November 11, 2025

ஈரோடு: நல்ல சம்பளத்தில் உள்ளூரில் வேலை!

image

ஈரோட்டில் செயல்பட்டு வரும், தனியார் நிறுவனத்தில் உள்ள Civil Engineer பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை வழங்கப்படும். இந்த பணிக்கு முன் அனுபவம் தேவையில்லை. இதற்கு சிவில் எஞ்சினியரிங்கில் டிப்ளமோ முடித்தவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE செய்யவும்.

News November 11, 2025

பவானி: தாயை கல்லால் அடித்துக் கொலை செய்த மகன்

image

பவானி அருகே மயிலம் பாடி சானார் பாளையம் பகுதியைச் சேர்ந்த ராக்கம்மாள்(65) என்பவரை அவரது மகன் பழனிச்சாமி 45 என்பவர் குடிபோதையில் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் வைத்து கல்லால் அடித்து கொலை செய்துள்ளார். உயிரிழந்த ராக்கம்மாள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணைக்கு பின்னர் பழனிச்சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

error: Content is protected !!