News January 11, 2025
கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை வெளியிட்ட ஆட்சியர்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2025-26ஆம் நிதியாண்டிற்கான கடலூர் மாவட்டத்திற்கான கடன் திறன் மதிப்பீட்டு ஆவணத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டார். உடன் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கவுரி சங்கர் ராவ், ஆர்பிஐ உதவி தலைமை மேலாளர் ஸ்ரீதர், நபார்டு உதவி தலைமை மேலாளர் சித்தார்த்தன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் (எல்டிஎம்) அசோக்ராஜா உட்பட பலர் உள்ளனர்.
Similar News
News November 15, 2025
கடலூர்: மின்சாரம் தாக்கி முதியவர் பரிதாப பலி

நெய்வேலி அருகே சின்ன காப்பன்குளத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் நேற்று வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் மின்சார ஸ்விட்ச் பாக்ஸ் எரிந்த நிலையில் இருந்தது. அதற்கு கீழே அவரது தந்தை கலயபெருமாள் (85) இறந்த நிலையில் கிடந்தார். இதில், முதியவர் மின்சாரம் தாக்கி இறந்ததாக தெரியவந்தது, சுப்ரமணியன் கொடுத்த புகாரில் நெய்வேலி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 14, 2025
கடலூர்: நாளை மின்தடை ரத்து

கடலூர் மாவட்டத்தில் 65 தேர்வு மையங்களில் நாளை டெட் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வை மாவட்டத்தில் 19 ஆயிரத்து 908 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் நாளை(நவ.15) பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெட் தேர்வு காரணமாக மின்தடை மாவட்டம் முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
News November 14, 2025
கடலூர்: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். இதனை ஷேர் பண்ணுங்க


