News August 21, 2024
கடந்த 3 ஆண்டுகளில் 6,588 பேருக்கு புற்றுநோய்

காரைப்பேட்டை அண்ணா புற்றுநோய் மருத்துவமனை வாயிலாக, கடந்த 3 ஆண்டுகளில் 28,000 பேருக்கு பரிசோதனை செய்ததில் 6,588 பேருக்கு புற்றுநோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை அதிகாரி தெரிவித்துள்ளார். குறிப்பாக, புகையிலை பயன்படுத்துவதால் ஆண்களுக்கு வாய் புற்றுநோய் அதிகளவு உள்ளது. புதிய மருத்துவமனை கட்டடம் பயன்பாட்டுக்கு வந்தால், கூடுதாக பல வசதிகளும், சேவைகளும் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.
Similar News
News January 21, 2026
காஞ்சியில் கோரா விபத்து!

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள தனியார் டயர் நிறுவன ஊழியர்கள் மகேந்திரன் (19) மற்றும் பாலமுருகன் (19). திங்கள்கிழமை இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினார். அப்போது வண்டலூர் – வாலாஜாபாத் சாலையில் குறுக்கே வந்த லாரி மீது இவர்கள் சென்ற பைக் மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 21, 2026
காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (ஜன.20) இரவு முதல் இன்று காலை வரை (ஜன.21) ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.