News June 17, 2024
கஞ்சா வைத்திருந்த 17 வயது சிறுவன் மீது வழக்கு

சிவகங்கை அருகே உள்ள எம்பிடிசி செட் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சிவகங்கை நகர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவரிடம் இருந்த 5 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து நேற்று விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 25, 2026
சிவகங்கை: NO EXAM.. NAVY-ல் ரூ.1,25,000 சம்பளத்தில் வேலை

இந்திய கப்பல் படையில் காலியாக உள்ள 260 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியது. B.E/B.Tech, B.Sc, B.Com படித்தவர்கள், திருமணமாகாத ஆண், பெண் இருபாலரும் பிப். 24க்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ.1,25,000 வழங்கப்படும். தேர்வு இல்லை. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். மேலும் விபரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு<
News January 25, 2026
சிவகங்கை: பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்

சோழபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் அவரது தாயார் வீட்டிற்கு சென்ற போது வீட்டிலிருந்து ரூ.20,000 திருடு போனது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அதே பகுதியை சேர்ந்த அங்கையர்கரசி, ராகுல், அருண், பார்வதி உள்ளிட்ட 5 பேர் சங்கீதாவை அவதூறாக பேசி தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சங்கீதா அளித்த புகாரின் பேரில் சிவகங்கை நகர் போலீசார் விசாரணை.
News January 25, 2026
சிவகங்கை: சிறுவன் மீது வாகனம் மோதி விபத்து

கொந்தகை பகுதியை சேர்ந்த 10 வயது சிறுவன் சாலையோரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது தவத்தரேந்தல் பகுதியை சேர்ந்த யோகேஷ் (24) என்பவர் ஓட்டிச் சென்ற டாடா ஏஸ் வாகனம் சிறுவன் மீது மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சிறுவனின் பெற்றோர் திருப்புவனம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.


