News October 10, 2024
கஞ்சா வழக்கில் மதுரை போலீஸ் கைது

மதுரை, வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த பிரகாஷ், பழனியில் உள்ள, 14வது பட்டாலியன் தமிழக சிறப்பு படை காவலராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், கஞ்சா கடத்தல் வழக்கொன்றில் கைதான சிவாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, சிவாவிடம் பணம் கொடுத்து ஆந்திராவில் கஞ்சா வாங்கி வர சொன்னது பிரகாஷ் தான் என்று தெரிய வந்தது. இதையடுத்து, கும்மிடிப்பூண்டி கலால் போலீசார், நேற்று முன்தினம் பிரகாஷை கைது செய்தனர்.
Similar News
News November 14, 2025
மதுரையில் இன்று இங்கெல்லாம் மின்தடை.!

மதுரை மாவட்டத்தில் சேந்தமங்கலம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இன்று (நவ.14) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கண்ட துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர்.
News November 14, 2025
சென்னை எழும்பூர் – மதுரை ரயில் சேவையில் மாற்றம்

சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.45க்கு புறப்படும், வைகை எக்ஸ்பிரஸ் மதுரைக்கு 20 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். நவம்பர் 26, 27, 29 மற்றும் டிசம்பர் 1 ஆகிய தேதிகளில் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் மதுரைக்கு தாமதமாக செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளன. சென்ட்ரலில் நவம்பர் 26 புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ், 2.40 மணி நேரம் தாமதமாக மறுநாள் அதிகாலை 1.40 மணிக்கு கிளம்புகிறது.
News November 13, 2025
மதுரை: The Modern Restaurant-ல் வேலை ரெடி

மதுரை மாவட்டம் நாகமலைபுதுக்கோட்டையில் உள்ள The Modern Restaurant ( Unit of Restaurant pvt Ltd) என்ற ஒட்டலில் Restaurant manager பணியிடத்திற்கு பல்வேறு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடத்திற்கு 10 வருட அனுபவம் வாய்ந்த ஆண்கள் தேவை. மாத ஊதியமாக ரூ.25,000 வரை வழங்கப்படும்.இந்த மாதம் 30ம் தேதிக்குள் டிகிரி படித்தவர்கள் இந்த <


