News April 5, 2024
கஞ்சா கடத்த முயன்றவர்களுக்கு 10 ஆண்டு சிறை!

கடந்த 2018 இல் இலங்கைக்கு 104 கிலோ கஞ்சா கடத்த முயன்ற வழக்கில் மதுரையைச் சேர்ந்த ராஜாஜி, பாண்டி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் கைதான பாண்டி, ராஜாஜி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அவர்களுக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நேற்று மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
Similar News
News March 12, 2026
மதுரை மக்களே இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு அல்லது கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க
⁍மதுரை: 9445000335
⁍மதுரை வடக்கு: 9445000336
⁍ மத்திய மதுரை: 9445000338
⁍மதுரை மேற்கு: 9445000339
⁍மதுரை கிழக்கு: 9445000340
⁍மேலூர்: 9445000341
⁍வாடிப்பட்டி: 9445000342
⁍உசிலம்பட்டி: 9445000343
⁍திருமங்கலம்: 9445000344
SHARE பண்ணி மற்றவர்களுக்கு தெரியபடுத்துங்க!
News March 12, 2026
மதுரை: பூட்டிய வீட்டில் சடலம் மீட்பு.!

அலங்காநல்லூர் அருகே சிக்கந்தர் சாவடியை சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி பெருமாள். இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் இவர் தங்கியிருந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதி மக்கள் அலங்காநல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News March 12, 2026
மதுரை: சித்திரைத் திருவிழா அட்டவணை வெளியீடு

மதுரை மாநகரில் உலகப் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா நிகழ்ச்சிகளுக்கான அட்டவணையை திருக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 18 ம் தேதி வாஸ்து சாந்தி தொடங்கப்பட்டு, 30 ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் ரிஷப வாகனத்தில் தீர்த்தவாரி நடைபெறும் வரை அனைத்து நாட்களுக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்பட்டுள்ளது. மே 1 ம் தேதி கள்ளழகர் வைகை எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


