News June 19, 2024
கக்கன் பிறந்தநாள்: விசிக சார்பில் கொண்டாட்டம்

குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக முன்னாள் தமிழக அமைச்சர் கக்கனுடைய பிறந்தநாள் நிகழ்ச்சி நேற்று கொண்டாடப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் காலித் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், மகளிர் அணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News January 17, 2026
குமரி: நிலம் வாங்கியவர்கள் கவனத்திற்கு..!

அனுமதியற்ற மனைப்பிரிவு வரமுறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், குமரி மாவட்டத்தில் தனிமனை வாங்கிய பொதுமக்கள் www.onlineppa.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக தங்களது நிலத்திற்கு லேஅவுட், கட்டட திட்ட ஒப்புதல் ஆகியவற்றை பெற்று கொள்ளலாம். இதுவே வரன்முறை ஒப்புதல் பெற www.tcponline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். மனை வாங்கியவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 17, 2026
குமரி: ஆட்டோ கவிழ்ந்து பரிதாப பலி

திட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் மாகின் (59). ஆட்டோ டிரைவரான இவர் ஆட்டோவில் நேற்று நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார். மேல புத்தேரி அருகே வரும்போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. படுகாயம் அடைந்த மாகின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 17, 2026
குமரி: நாளை கடைசி நாள்; ஆட்சியர் அறிவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் தீவிர வாக்காளர் சிறப்பு திருத்த முகாம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் விடுபட்டவர்கள் மற்றும் புதியவர்கள் தங்கள் பெயர்களை இணைத்துக் கொள்ள ஜனவரி 18-ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இறுதி வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகு மீனா கேட்டுக் கொண்டுள்ளார்.


