News August 19, 2025
ஓய்வு பெற்ற பாண்லே ஊழியர் தற்கொலை

புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சேர்ந்தவர் தேவநாதன் (68). இவர் ஓய்வு பெற்ற பாண்லே ஊழியர் ஆவார். இந்நிலையில், தேவநாதன் கடந்த சில மாதங்களாக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர், வீட்டின் அருகே தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 13, 2025
புதுச்சேரி: கொலை செய்த வாலிபர் கைது

புதுச்சேரியில் கள்ளத்தொடர்பு காரணமாக மாயமான பெண், அடித்து சாக்கு மூட்டையில் கட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கழுத்தை நெரித்து கொன்றதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இதே போன்ற கள்ளத்தொடர்பில் வேறு ஒரு பெண்ணைக் கொலை செய்த வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வெளிவந்த ஐயப்பன் என்ற வாலிபர், இந்த கொலையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
News December 13, 2025
புதுச்சேரி: மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்தியில், “வரும் 16.12.2025 முதல் 15.01.2026 வரை பொதுமக்கள் மற்றும் வாக்காளர்களிடமிருந்து உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபணைகள் பெறப்படும். இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் அச்சம் அடைய வேண்டாம்.” என தெரிவித்துள்ளார்.
News December 13, 2025
புதுவை சமூக செயல்பாட்டாளருக்கு புதுடெல்லியில் விருது

புதுடில்லியில் பாரதிய தலித் சாகித்ய அகாடமி சார்பில், இன்று(12.12.2025) புரட்சியாளர் அம்பேத்கர் விருது வழங்கப்பட்டது. அதில் புதுவை மாநிலத்தின் ஏப்ரல்14 இயக்கத்தின் தலைவர் நா.நித்தியானந்தம் அவ்விருதினை பெற்றார். இவருக்கு புதுவையை சார்ந்த பல முற்போக்கு இயக்கங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


