News November 30, 2024
ஓட்டப்பந்தய போட்டியில் காஞ்சிபுரம் மாணவி அசத்தல்

சென்னை பல்கலைக்கழகம் உடற்கல்வி துறை சார்பில், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரிகளுக்கு இடையேயான தடகள போட்டி, கடந்த நவ.26 – 28 வரை சென்னை ஜவஹர்லால் உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இப்போட்டியில், காஞ்சிபுரம் கீழம்பியில் உள்ள காஞ்சி கிருஷ்ணா கல்லூரி மாணவி வினிதா, 10,000மீ., 5,000மீ., ஓட்டப்பந்தய போட்டியிலும் 2ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்று அசத்தியுள்ளார்.
Similar News
News November 14, 2025
குன்றத்தூரில் துணை மின் நிலையத்தை திறந்த அமைச்சர்

இன்று (நவ.14) காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் நகராட்சியில் கட்டப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் திறந்து வைத்தார்கள். உடன் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, திருப்பெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை ஆகியோர் உள்ளனர்.
News November 14, 2025
காஞ்சிபுரம்:லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

காஞ்சிபுரம் மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (044-27237139) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்
News November 14, 2025
காஞ்சி: கார் ஷோ ரூமுக்குள் புகுந்த பாம்பால் பரபரப்பு!

காஞ்சி, வெள்ளைகேட் அருகில் தனியார் கார் ஷோரூம் செயல்படுகிறது. நேற்று யாரும் எதிர்பாராத வகையில் பாம்பு ஒன்று ஷோரூமில் புகுந்து விட்டது. இதை கவனித்த பணியாளர்கள் பாம்பை விரட்ட முயன்றனர். பாம்பு, கார் உதிரிபாகங்கள் வைத்திருந்த அறைக்குள் சென்று பதுங்கியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் 6 அடி நீளமுள்ள பாம்பை மீட்டு, வனத்திற்குள் விட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


