News January 10, 2025
ஓசூரில் ரூ.7000 கோடி முதலீடு செய்யும் டாடா நிறுவனம்

ஓசூரில் டாடா நிறுவனம் 7000 கோடி ரூபாய் முதலீடு செய்து ஐபோன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த விரிவாக்கம் மூலம் அடுத்த 6 ஆண்டுகளில் 30 ஆயிரம் வேலை வாய்ப்புகள் உருவாகும். விரிவாக்கம் செய்தபின் ஐபோன் பாகங்களை அசெம்பிள் செய்யும் பணி தொடங்கும் எனவும் இதற்கான அறிவிப்பு சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 10, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (09.11.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்
News November 9, 2025
கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவி

தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றும் ரஞ்சித்குமாரின் மகள் பத்மஸ்ரீ (17), கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார். 7 வயதிலிருந்து சிலம்பம் கற்று வரும் இவர், மாநில, தேசிய போட்டிகளில் பல தங்க, வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளார். சமீபத்தில் நேபாளில் நடைபெற்ற உலக அளவிலான சிலம்ப போட்டியில் தங்கம் வென்று, ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்து பெற்றார்.
News November 9, 2025
கிருஷ்ணகிரி: பஸ்ல போறவங்க இத நோட் பண்ணுங்க

பேருந்தில் டிக்கெட் எடுக்கும் போது மீதி சில்லரை பின்னர் தருவதாக கண்டக்டர் சொல்லி விட்டால், சில்லரை வாங்கும் வரை நிம்மதி இருக்காது. சில சமயம் மறந்து சில்லறை வாங்காமல் இறங்கியிருப்போம். சில்லறை வாங்காமல் இறங்கி விட்டால் 1800 599 1500 எண்ணை தொடர்பு கொண்டு, பயண சீட்டு விபரங்களை தெரிவித்து மீதி சில்லறையை G-PAY மூலம் பெறலாம். *பஸ்ல போகும் போது யூஸ் ஆகும் ஷேர் பண்ணுக*


