News March 27, 2024

ஒளிரும் சட்டைகள் வழங்கல்

image

ஈரோடு மாவட்டம், சம்பத் நகர்- நசியனூர் சாலை சந்திப்பு பகுதியில் மக்களவை தேர்தலை முன்னிட்டு தூய்மை பணியாளர்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட ஒளிரும் சட்டைகள் வழங்கப்பட்டது. இதனை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வழங்கினார். உடன் கூடுதல் ஆட்சியர் மணிஷ், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி இருந்தனர்.

Similar News

News January 14, 2026

ஈரோடு: ஆதார் வேண்டுமா?.. ஒரு ‘Hi’ சொல்லுங்க

image

ஈரோடு மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இது வேலை செய்யவில்லை என்றால் <>இங்கே கிளிக் செய்து<<>> உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 14, 2026

பவானி அருகே விபத்தில் சிக்கியவர் உயிரிழப்பு

image

பவானி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (66). இவர் கடந்த சில நாள்களுக்கு முன்பு சாலை விபத்தில் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்ற முன்தினம் வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி கிடந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே இறந்தது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News January 14, 2026

அந்தியூரில் சேவல் சூதாட்டம்: 4 பேர் கைது

image

அந்தியூர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சுகந்தி தலைமையிலான காவல்துறையினர் பெருமாபாளையம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் சேவல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக விமல், இளவரசன், கணேசன், கதிரேசன் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து சூதாட்டத்துக்கு பயன்படுத்திய 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

error: Content is protected !!