News May 2, 2024
ஒரே நாளில் 81 நிறுவனங்கள் மீது வழக்கு

ஈரோடு மாவட்டத்தில், மே 1ஆம் தேதி தொழிலாளா் தினத்தன்று , ஈரோடு மாவட்ட தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், தொழில் நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் ஈரோடு, பவானி, பெருந்துறை, கோபி, சத்தி ஆகிய பகுதிகளில் உள்ள தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் 100 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் விடுமுறை அளிக்காத 81 நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Similar News
News December 9, 2025
ஈரோட்டில் கொடூரக் கொலை: கணவன் கைது

பெருந்துறை காஞ்சிகோயில் சாலையில் கடந்த 7ம் தேதி காஞ்சிபுரம் ரோட்டை சேர்ந்த விஜயா என்பவர் கழுத்தில் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதில் ஏற்கனவே விவாகரத்தான விஜயாவின் கணவர் செங்கோட்டையனுக்கும் இவருக்கும் ஜீவனாம்சம் பெறுவதில் தகராறு இருந்துள்ளது. இதனால் கோபம் கொண்ட செங்கோட்டையன் சாலையில் வைத்து கழுத்தில் குத்தி கொலை செய்தார் இந்த வழக்கில் செங்கோட்டையனை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
News December 9, 2025
சென்னிமலை அருகே சோகம்: விவசாயி பலி

சென்னிமலை அடுத்த கவுண்டனூரைச் சேர்ந்தவர் மாகாளி (63). விவசாயக் கூலியான இவர், கடந்த 6-ம் தேதி காலை அங்குள்ள வயல்வெளியில் மயங்கிக் கிடந்தார். தகவலறிந்து வந்த மகன் பாலகிருஷ்ணன், அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். பரிசோதனையில் அவருக்குத் தலையில் ரத்தக் கசிவு இருப்பது கண்டறியப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி மாகாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
News December 9, 2025
சென்னிமலை: மகளுக்கு பாலியல் தொல்லை தந்தை கைது

சென்னிமலை அருகே 16 வயது சிறுமிக்கு, அவரது வளர்ப்புத் தந்தை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தாய் வங்கி வேலைக்காக வெளியே சென்றிருந்த நேரத்தில் நடந்த இச்சம்பவம் குறித்து, சிறுமி தாய்க்கு தகவல் அளித்தார்.உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகளை மீட்ட தாய், சென்னிமலை போலீசில் புகாரளித்தார். இதன் பேரில் வளர்ப்புத் தந்தை மீது போக்சோ சட்டத்தில் கைது செய்து அவரை சிறையில் அடைத்தனர்.


