News April 10, 2024
ஒரே நாளில் 2 ஆயிரம் பேர் முன் பதிவு

மதுரை மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை நேரில் கண்டு தரிசிக்க விரும்பும் பக்தர்களின் வசதிக்காக ரூ.200 மற்றும் ரூ.500-க்கான டிக்கெட்டுகளை பெறுவதற்கு முன்பதிவு ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் நேற்று தொடங்கியது. நேற்று காலை முதல் ஆர்வத்துடன் ஏராளமான பக்தர்கள் முன்பதிவு செய்தனர். இதனிடையே ஒரே நாளில் 2000 மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Similar News
News December 11, 2025
மதுரை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

மதுரை மாவட்டத்தில் இன்று (11.12.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News December 11, 2025
மதுரை: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

மதுரை இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 11, 2025
BREAKING: மதுரையில் 4 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் ஏறத்தாழ 4 இலட்சம் வாக்காளர்கள் இறந்தவர்கள், இரட்டை வாக்கு, வீடு மாற்றம், SIR படிவங்களை சமர்ப்பிக்காதது போன்ற காரணங்களால் நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 27 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் உள்ளனர். இதில் ஒன்றரை இலட்சம் பேர் உயிரிழந்தது காரணமாக நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


