News April 1, 2025

ஒரே நாளில் ரூ.13 லட்சம் வரி வசூல்

image

2024-2025 ஆம் ஆண்டுக்கான தொழில் வரி, குடிநீர் வரி, சொத்து வரி என அனைத்து வரிகளுக்கும் இன்று கடைசி நாள் என நேற்று அறிக்கை விடப்பட்டிருந்த நிலையில், வரி வசூலிக்க மண்டல வாரியாக 400 பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். மேலும், நடமாடும் வரி வசூல் மையமும் ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று ஒரே நாளில் ரூ.13 லட்சம் வரியை செலுத்தியுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News January 17, 2026

ஈரோடு: கேஸ் சிலிண்டர் பயனாளர்கள் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 17, 2026

தமிழ்நாட்டில் ஈரோடு முதலிடம் பிடித்தது!

image

தமிழ்நாட்டில் நேற்று அதிக அளவாக, ஈரோடு நகரில் அதிகளவு வெயில் பதிவாகி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் தினசரி மாலை தொடங்கி மறுநாள் காலை வரை குளிர் வாட்டுகிறது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் அதிக அளவாக ஈரோட்டில் 32.6 டிகிரி செல்சியஸ் வெயில் (90.68 டிகிரி பாரன்ஹீட்) பதிவானது.

News January 17, 2026

ஈரோடு: அரசு சேவைகள் இனி உங்கள் வாட்ஸ்அப்பில்!

image

ஈரோடு மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள்,மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே பொதுமக்கள் எளிதாகப் பெறலாம். இதற்காகத் தமிழக அரசு 7845252525 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணிற்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இதனை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!