News April 12, 2024
ஒரே நாளில் சூடுபிடிக்கும் பிரச்சாரம்

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, ஐஜேகே, நாம் தமிழர் உட்பட 23 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். இந்நிலையில் நாளை (13.4.24) பரிவேந்தரை ஆதரித்து பிரதமர் மோடியும், சந்திரமோகனை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமியும், தேன்மொழியை ஆதரித்து சீமான் நெ.1 டோல்கேட் பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளனர். 3 முக்கியத் தலைவர்கள் ஒரே நாளில் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
Similar News
News November 13, 2025
பெரம்பலூர்: இந்த பகுதிகளில் நாளை மின் தடை

கீழப்பெரம்பலூர் மற்றும் தேனூர் துணை மின் நிலையங்களில் நாளை (நவ.14) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக கீழப்பெரம்பலூர், வயலப்பாடி, அகரம், சீகூர், புதுவேட்டக்குடி, காடூர், நமங்குணம், கோவில்பாளையம், துங்கபுரம், குழுமூர், மாத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
News November 13, 2025
பெரம்பலூர்: எஸ்பி அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம்

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் நேற்று (12.11.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் சிறப்பு மனு முகாம் நடைபெற்றது. இதில், காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா கலந்துகொண்டு பொதுமக்களிடம் நேரடியாக மனுவைப் பெற்றார். இந்த மனு முகாம் மூலம் 37 மனுக்கள் பெற்றப்பட்டு சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
News November 12, 2025
பெரம்பலூர்: டிகிரி போதும் வங்கியில் வேலை ரெடி!

அரசு வங்கியான பேங்க் ஆப் பரோடா வங்கியில் காலியாகவுள்ள 2700 Apprentice பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 2,700 (தமிழ்நாடு – 159)
3. சம்பளம்: ரூ.15,000
4. கல்வித் தகுதி: Any Degree
5. வயது வரம்பு: 20 – 28 (SC/ST-33, OBC-31)
6. கடைசி தேதி: 01.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


