News August 24, 2024
ஒரே டிக்கெட்டில் இனி சிங்கப்பூர் செல்லலாம்

திருச்சி – இலங்கை இடையே ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் சார்பில் தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திருச்சியில் இருந்து இலங்கை வழியாக சிங்கப்பூருக்கு ஒரே பயணச்சீட்டு மூலம் செல்லும் புதிய நடைமுறையை ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் தொடங்கி உள்ளது. இந்த விமான சேவை வாரத்தில் 4 நாட்கள் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.
Similar News
News November 10, 2025
திருச்சி: காவிரி ஆற்றில் மிதந்த பிணம்

முசிறி பரிசல்துறை பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் தண்ணீரில் மிதப்பதாக முசிறி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 10, 2025
திருச்சி அருகே சிக்கிய திருட்டு கும்பல்

உப்பிலியபுரம் அடுத்த நாகநல்லூர் ஊராட்சியை சேர்ந்த குமரவேல் (40) என்பவற்றின் டூவீலர் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது தொடர் டூவீலர் திருட்டில் ஈடுபட்ட கோபி (29), புத்த பிரகாஷ் (29), அஜித் (28), ஹரிகரன் (20) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 10 டூவீலர்கள், ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஒரு மொபட் என மொத்தம் 12 இருசக்கர வாகனங்கள் மீட்டனர்.
News November 10, 2025
கால்வாயில் தவறி விழுந்த நபர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் எஸ் கண்ணனூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார்(51). டீ மாஸ்டராக பணிபுரிந்து வந்த இவர், நேற்று சமயபுரம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அங்கு இருந்த கால்வாயில் தவறி விழுந்து மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். இது குறித்த தகவல் அறிந்து வந்த சமயபுரம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


