News November 11, 2024
ஒக்கியம் மடு ஆற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

கண்ணகி நகர் காவல் நிலையத்தில் உள்ள தங்கவேலு இன்ஜினியரிங் கல்லூரி அருகே ஒக்கியம் மடு ஆற்றில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி உடல் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தீயணைப்புத்துறை உதவியுடன் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மூதாட்டியின் உடலை கைப்பற்றி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 8, 2025
செங்கல்பட்டு மக்கள் காவல்துறை முக்கிய அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை அறிவிப்பு ஒன்றை நேற்று (நவம்பர் -07) வெளியிட்டுள்ளது. நீங்கள் பயன்படுத்தும் முக்கியமான செயலிகளில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தங்களது கடவுச்சொல் (UPI PIN)-யை அடிக்கடி மாற்றியமைப்பதின் மூலமாக சைபர் மோசடியை தவிர்க்கலாம். ஒரே கடவுச்சொல்லை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏதேனும் மோசடி ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஷேர் பண்ணுங்க
News November 8, 2025
செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (நவம்பர்-07) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News November 7, 2025
செங்கல்பட்டு காவல்துறை சைபர் கிரைம் அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை அறிவிப்பு ஒன்று இன்று
(நவம்பர் -07) வெளியிட்டுள்ளது. நீங்கள் பயன்படுத்தும் முக்கியமான செயலிகளில் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தங்களது கடவுச்சொல் (UPI PIN)-யை அடிக்கடி மாற்றியமைப்பதின் மூலமாக சைபர் மோசடியை தவிர்க்கலாம். ஒரே கடவுச்சொல்லை தொடர்ந்து பயன்படுத்துவதால் ஏதேனும் மோசடி ஏற்பட வாய்ப்பு உள்ளது.


