News July 16, 2024
ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்கத் தடை

கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை ஒகேனக்கல் காவிரியாற்றில் பரிசல் இயக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் நீர் திறப்பின் போது வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பதால் காவிரி கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கரையை கடக்கவும், கால்நடைகளை ஆற்றங்கரைக்கு கொண்டு செல்வதை தவிர்க்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Similar News
News July 8, 2025
தர்மபுரியில் இரவு ரோந்து செல்லும் போலீஸ் விவரங்கள்!

தர்மபுரி மாவட்ட காவல்துறை 08.07.2025 தேதிக்கான இரவு ரோந்து செல்லும் அலுவலர்கள் விபரங்களை வெளியிட்டுள்ளது. மாவட்ட ரோந்து அலுவலராக கே.எம். மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி, அரூர், பென்னாகரம் மற்றும் பாலக்கோடு ஆகிய அனைத்து காவல் நிலையங்களுக்கும் பொறுப்பான இரவு ரோந்து அதிகாரிகள் பெயர் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் பட்டியலாக வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசரத் தேவைக்காக தொடர்புக் கொள்ளலாம்.
News July 8, 2025
தருமபுரி அரசு கலை கல்லூரியில் கல்லூரி சந்தை

தருமபுரி அரசு கலை & அறிவியல் கல்லூரியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 2025-26 ஆம் ஆண்டிற்கான மாவட்ட வழங்கல் & விற்பனை சங்கத்தின் மூலம் பொருட்கள் விற்பனை & கண்காட்சி இன்று முதல் ஜூலை 10 வரை நடைபெறுகிறது. இந்த கல்லூரி சந்தையை மாவட்ட ஆட்சியர் சதீஷ் இன்று காலை துவக்கி வைத்தார். இதில், கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்று பயனடைய மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 8, 2025
தருமபுரியில் வாடகை வீட்டில் ஹவுஸ் ஓனர் பிரச்சனையா? (1/2)

வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை என வாடகை வீட்டில் குடியிருப்போர் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்க ஹவுஸ் ஓனர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு தந்தாலோ 1800 599 01234 என்ற எண்ணில் புகார் செய்யலாம் அல்லது உங்க பகுதி வாடகை அதிகாரியிடம் (9445000908) புகார் செய்யலாம் . ஷேர் பண்ணுங்க. <<16990140>>தொடர்ச்சி<<>>