News August 19, 2025

ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரிப்பால் கலெக்டர் ஆய்வு

image

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரித்ததைத் தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சதீஷ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். இந்த ஆய்வின்போது, பென்னாகரம் ஒன்றிய பொறுப்பாளர் மடம் முருகேசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Similar News

News December 12, 2025

தருமபுரி: பெண்ணை கேலி செய்ததால் கழுத்தறுத்து கொலை!

image

தருமபுரி, ஒகேனக்கல் அருகே, கடந்த டிச.7 பெண்ணை கேலி செய்ததாக கூறி, கிருஷ்ணகிரியை சேர்ந்த தேங்காய் வியாபாரி ருத்ராட்ச ராவ்(35) என்பவரை, அப்பெண்ணின் உறவினர்கள் கழுத்தை அறுத்து கொன்று, காவிரியாற்றில் வீசி உள்ளனர். பின் அவரது சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வந்த நிலையில்,நேற்று (டிச.11) முருகேசன்(49) நாகராஜ்(45) மூர்த்தி(35) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

News December 12, 2025

தருமபுரி: SBIல் சூப்பர் வேலை – ரூ.51,000 வரை சம்பளம்!

image

தருமபுரி மக்களே,பாரத ஸ்டேட் வங்கிகளில் (SBI) customer relationship, executive உள்ளிட்ட 996 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் டிகிரி முடித்து, 20 வயது பூர்த்தி அடைந்தவர்கள் இதற்கு வரும் டிச.23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், மாத சம்பளமாக ரூ.51,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து விண்ணப்பித்து உங்கள் வேலையை உறுதி செயுங்கள். ஷேர் பண்ணுங்க!

News December 12, 2025

BREAKING: தருமபுரி, கருக்கலைப்பில் உயிரிழந்த கர்ப்பணி

image

தருமபுரி, பென்னாகரம் அடுத்த ஏரியூர் பூச்சுரில் சட்டவிரோத கருக்கலைப்பில் கர்ப்பணி உயிரிழந்துள்ளார். மூன்றாவது குழந்தையும் பெண் குழந்தை என அறிந்து கருக்கலைப்பு செய்துள்ளார். கர்ப்பணி மாடிப்படியில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக கணவன் அழுது நாடகமாடிய நிலையில் உறவினர் அளித்த புகாரின் பெயரில் போலீசார் கணவர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரித்து வருகிறது.

error: Content is protected !!