News November 22, 2024
ஒகேனக்கலில் வன உயிரின பாதுகாப்பு மையம்- அதிகாரிகள் தகவல்

ஒகேனக்கல் சுற்றுலா தலத்திற்கு ஆண்டுதோறும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். வனப்பகுதிகளின் இயற்கை சமநிலை, வனவிலங்கு பாதுகாப்பு, முக்கியத்துவம் குறித்து இங்கு வந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒகேனக்கலில் 5 கோடி மதிப்பிலான வனவிலங்கு பாதுகாப்பு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 10, 2025
தருமபுரியில் இன்றே கடைசி-2,708 காலியிடங்கள்!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று நவ.10. 5) விண்ணப்பிக்க: <
News November 10, 2025
தருமபுரியில் 1,027 பேர் ஆப்சென்ட்!

தருமபுரி மாவட்டத்தில் சீருடை பணியாளர் தேர்வு மையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு நேற்று (நவ.9) நடைபெற்றது. இதில் மொத்தம் 9,559 பேர் தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. இதில், 8,538 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்ததாகவும், 1,027 பேர் ஆப்சென்ட் ஆனதாகவும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
News November 10, 2025
தருமபுரி: தொடரும் வேட்டை-ரூ.80,000 அபராதம்!

காரிமங்கலம் பகுதியில் திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த அர்ஜுன் (28), சந்தோஷ் (30) ஆகியோர் திருப்பத்தூர் பகுதியில் வேட்டையாடிய முயல் கறியை விற்பனைக்காக கொண்டு வந்தனர். அப்போது காரிமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் அவர்களை பிடித்து, பாலக்கோடு வனச்சரகம் கொண்டு வந்து விசாரணை செய்தனர். தருமபுரி மாவட்ட வன அலுவலர் இருவருக்கும் தலா ரூ.40,000 வீதம் மொத்தம் ரூ.80,000 அபராதம் விதித்தார்.


