News April 1, 2025
ஐபிஎல் போட்டி நடத்தக்கூடாது மயிலம் எம்எல்ஏ கோரிக்கை

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று விழுப்புரம் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாவட்டச் செயலாளரும்,மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் தமிழக அரசிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.அதில் தமிழ்நாட்டில் பொது தேர்வு நடைபெறும் நாட்களில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த தமிழக அரசு அனுமதி தரக் கூடாது என்று வேண்டுகோள் வைத்தார்.
Similar News
News January 20, 2026
விழுப்புரம்: +2 மாணவன் அடித்துக் கொலை!

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தக்காவை சேர்ந்தவர் விக்னேஷ். பிளஸ் 2 படித்து வந்த இவர், நேற்று(ஜன.19) அதே பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில், பசுமாட்டை மேய்ச்சலுக்காக கட்டியிருந்தார். இதில், சுப்ரமணி, பூபதி, அவரது குடும்பத்தினர், விக்னேஷ், அவரது தந்தை வீரப்பன், தாய் மலர் ஆகியோரை தாக்கினர். இதில், விக்னேஷ் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News January 20, 2026
விழுப்புரம்: கத்தியால் குத்தி கருணைக் கொலை!

விழுப்புரம்: கண்ணமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கோதண்டராமன். காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு இரண்டு மகள்கள். இதில், இரண்டாவது மகள் சுமலதாவிற்கு 9 ஆண்டுக்கு முன்பு கோலியனூரில் திருமணம் நடந்தது. இவருக்கு ஏழு வயதில் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், நீண்ட நாட்களாக நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளார். இதனை பார்க்க முடியாத தந்தை, தன் மகளை கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.
News January 20, 2026
விழுப்புரம்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்!

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டம் முழுவதும் சட்டம் ஒழுங்கு மற்றும் அவசர உதவிக்காக காவல் நிலைய வாரியாக தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. DSP M.S. ரூப்குமார் (KKPM/SDO) தலைமையில், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, கோட்டகம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் காவல் ஆய்வாளர்களின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவசர நேரங்களில் உடனடியாக தொடர்பு கொண்டு உதவி பெறலாம். ஷேர்!


