News August 7, 2025
ஐடிஐ-யில் நேரடி சேர்க்கை; கால அவகாசம் நீட்டிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம், கோட்டூர், வண்டாம்பாளை ஆகிய அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் 2025 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை வரும் ஆக.31 தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
Similar News
News November 7, 2025
திருவாரூர்-திருச்சி கூடுதல் ரயில் இயக்க ஆலோசனை

திருவாரூரில் இருந்து திருச்சிக்கு கூடுதல் ரயில் இயக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது காலை 8:15 மற்றும் மாலை 4:25 மணிக்கு திருச்சிக்கு ரயில் இயக்கப்படுகிறது. கூடுதல் ரயில் இயக்க ஆலோசனை நடைபெறுகிறது என்றும், திருவாரூர் ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமரா உடன் நிறுவ ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
News November 7, 2025
திருவாரூர்: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கு முடங்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT
News November 7, 2025
திருவாரூர்: யூபிஎஸ்சி தேர்வுக்கு இலவச பயிற்சி!

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் எஸ்.சி மற்றும் ஒபிசி மாணவர்களுக்கு மாதம் ரூ.4500 கல்வி உதவித் தொகையுடன் கூடிய, இலவச மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கான (UPSC) பயிற்சி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க (25.11.2025) இறுதி நாளாகும். மொத்தமுள்ள 100 இடங்களில் 70 இடங்கள் எஸ்சிக்கு, 30 இடங்கள் ஒபிசி பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.


