News January 10, 2025
ஐடிஐ உரிமத்துக்கு விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு

நெல்லை மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு தொழில் பள்ளிகள் (ஐடிஐ) தொடங்கவும் தொடர் அங்கீகாரம் பெறவும் புதிய தொழில் பிரிவுகளில் கூடுதல் அலகுகளை இணைக்கவும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். மேலும் விபரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலரை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 10, 2025
கொடுமுடியார் அணையில் நாளை தண்ணீர் திறப்பு

கொடுமுடியாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்கு நாளை காலை 9:30 மணிக்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு தண்ணீர் திறந்து வைக்க உள்ளார் மாவட்ட ஆட்சித் தலைவர் இரா .சுகுமார் தலைமை தாங்குகிறார். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் விவசாயிகள் முன்னிலை வகிப்பார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News November 9, 2025
நெல்லை: இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும், இன்று (நவ.9) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News November 9, 2025
நெல்லை: மாநகரில் இரவு காவல் அதிகாரி எண்கள்

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ 9) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.


