News August 19, 2025
ஐஓபி வங்கி சார்பில் இலவச பயிற்சி வகுப்புகள்

மயிலாடுதுறை பட்டமங்கலம் தெருவில் உள்ள ஐஓபி வங்கி, ரூரல் செல்ஃப் எம்பிளாய்மென்ட் ட்ரைனிங் இன்ஸ்டிட்யூட் உடன் இணைந்து, தையல், அழகுக்கலை, ஓட்டுநர் பயிற்சி மற்றும் கைபேசி சரிபார்த்தல் போன்ற பல இலவச பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது. மதிய உணவுடன் வழங்கப்படும் இந்த அரிய வாய்ப்பை, ஆர்வமுள்ளோர் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த வகுப்புகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, மயிலாடுதுறை ஐஓபி வங்கியைத் தொடர்புகொள்ளலாம்.
Similar News
News December 15, 2025
மயிலாடுதுறை: குறைதீர் கூட்டத்தில் 401 மனுக்கள்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பங்கேற்று, தங்களது கோரிக்கை மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர். மொத்தம் 401 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தினார்
News December 15, 2025
மயிலாடுதுறை: வீட்டு வரி செலுத்துவது இனி ஈஸி!

மயிலாடுதுறை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின்கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றை செலுத்தவும், வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் சென்று அலைய வேண்டாம். நீங்களே https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் அனைத்து சேவைகளையும் பெறலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் Share பண்ணுங்க!
News December 15, 2025
மயிலாடுதுறை: ரூ.1000 வரலையா இத பண்ணுங்க!

மயிலாடுதுறை மக்களே ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வராதவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேல்முறையீடு செய்வதற்கான வழிமுறை:
1.இங்கு<
2.அடுத்து, SERVICES-ஐ தேர்ந்தெடுத்து, அதில் KMU-101 KMUT APPEAL பகுதிக்குள் செல்லவும்.
3. ஆதார் எண், ஆண்டு வருமானத்தை பதிவு செய்து மேல்முறையீடு தாக்கல் செய்யுங்க.
இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!


