News May 13, 2024
ஏர்போர்ட்டில் சிக்கிய கடத்தல் தங்கம்.!

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று சார்ஜாவில் இருந்து வந்த ஏர் எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணி டைல்ஸ் கட்டிங் மெஷினில் மறைத்து எடுத்து வந்த 1 கிலோ 299 கிராம் எடை கொண்ட கடத்தல் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.92 லட்சம். மேலும் அந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 7, 2025
திருச்சி மாவட்ட நூலகத்தில் குரூப் 4 மாதிரி தேர்வு

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4, கட்டணமில்லா மாதிரித்தேர்வு 8-ம் தேதி காலை 10:00 – 1:30 மணி வரை நடைபெற உள்ளது.
அதில் முழு பாடப்பகுதிகளில் இருந்தும் வினாக்கள் இடம் பெறும். வினாத்தொகுப்பு வழங்கப்பட்டு ஓஎம்ஆர் விடைத்தாளில் பதிலளிக்க வேண்டும். இதில், மதிப்பெண் குறைந்தவர்கள் அதிகரிக்க அறிவுரைகள், வழிமுறைகள் வழங்கப்படும் என மாவட்ட நூலக அலவலர் சரவணக்குமார் தெரிவித்துள்ளார்.
News December 6, 2025
திருச்சி: ஆதார் கார்டு- முக்கிய அப்டேட்!

திருச்சி மக்களே, ஆதார் கார்டில் மாற்றம் செய்யனுமா? இதற்காக நீங்க ஆதார் மையங்களில் கால் கடுக்க நிற்க வேண்டாம். வீட்டில் இருந்தே மாற்றும் வழியை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது. இந்த <
News December 6, 2025
திருச்சி: அரசு பஸ் – கார் மீது மோதி விபத்து

மணப்பாறையில் இருந்து இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து வடசேரி பிரிவு அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக சாலையை கடக்க முயன்ற கார் மீது மோதியது. இதில் காரில் இருந்தவர்கள் காயம் அடைந்த நிலையில், அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


