News June 17, 2024

ஏமாற்றமடைந்த சுற்றுலா பயணிகள்

image

கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி முக்கடல் சங்கமம், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை காண நேற்று இன்றும் விடுமுறை தினமாதலால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சுற்றுலாப் பயணிகள் நேற்று மாலையில் சூரிய அஸ்தமத்தை காண்பதற்கு ஆர்வமாக காத்திருந்தனர். தற்போது மழை மேகம் காரணமாக சூரிய அஸ்தமனம் தெளிவாக தெரியவில்லை இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.

Similar News

News January 23, 2026

குமரி: Driving Licence-க்கு முக்கிய Update!

image

குமரி மாவட்ட மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் இங்கு <>கிளிக்<<>> செய்து மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 23, 2026

குமரியில் 2 பேர் கைது..!

image

தக்கலை அருகே ரெஜின் என்பவர் பழைய கார்கள் விற்பனை செய்யும் ஷோரூம் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜன.11 அன்று ஷோரூமில் நிறுத்திவைக்கப்பட்ட 14 கார்களில் இருந்து 14 பேட்டரிகள் திருடு போனது. இதுகுறித்து ரெஜின் கேமரா பதிவுகளுடன் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் CCTV காட்சி அடிப்படையில் தக்கலை போலீசார் நேற்று சுபின், செல்வன் ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.

News January 23, 2026

குமரி காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, இன்றைய (22.01.2026) இரவு ரோந்து அதிகாரிகள் குறித்த அட்டவணை தகவல்கள் வெளியாகி உள்ளது. உங்கள் பகுதிகளில் எந்த விதமான குற்ற சம்பவங்கள் நடந்தாலும், சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளின் எண்ணிற்கு உடனே அழையுங்கள் என கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

error: Content is protected !!